கொழும்பு, மோதரை, ஹேனமுல்ல பிரதேசத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோதரை பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 05 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.