(FASTNEWS|COLOMBO) – ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் நகர பகுதியில் 1200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
ஹட்டன் கலால் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஹட்டன் நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் இன்று(31) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் கலால் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.