ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஜகிரிய பகுதியில் சுமார் 3 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போதை பொருள் 30 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.