(FASTNEWS| COLOMBO) – கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமையை எதிர்த்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீள் பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், கைதாகி விளக்கமறியில் வைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இன்று(09) பிணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.