ஹொரணை – கொழும்பு பிரதான பாதையில் கொரலயிம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஹொரணை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று எதிர் திசையில் வந்துள்ள மோட்டார் சைக்களில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த ஹொரணை, பொருவதண்ட – கநேதன்ன பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் வெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காத்துடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(rizmira)