ஹொரவபொத்தானயில் கைது செய்யப்பட்ட இருவரையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த 2 சந்தேக நபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க கெப்படிகொல்லாவ மாவட்ட நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று(17) அனுமதி வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஹொரவபொத்தான பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர் மற்றும் பதில் அதிபர் ஆகியோரே இவ்வாறு நேற்று(16) இரவு ஹொரவபொத்தான பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.