ஹோட்டல்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாக்க வேண்டுமென உணவக உரிமையாளர் சங்கத்தின் தேசிய அழைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள், பால் தேனீர், தேனீர் போன்றவற்றின் விலைகளை ஹோட்டல் உரிமையாளர்கள் காட்சிப்படுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
அநேகமான ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலைகள் வித்தியாசப்படுகின்றன.இதனால் ஹோட்டலுக்குச் செல்லும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இப்போது பால் தேனீரை எடுத்துக் கொண்டால் 35, 40 மற்றும் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
விலை நிர்ணயம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.தமக்கு விரும்பிய விரும்பிய விலைகளில் பால் தேனீரை விற்பனை செய்ய முடியாது.
முட்டை அப்பம், ரோல்ஸ், முட்டை ரொட்டி, பெடிஸ் போன்றனவும் இவ்வாறே ஓர் விலை நிர்ணயத்தில் விற்பனை செய்யப்படுவதில்லை.
எனவே அனைத்து ஹோட்டல்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
மரக்கறி வகைகளையும் அத்தியாவசியப் பண்டங்களாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.