ஹோமாகம பிரதேசத்தில் இன்று ஊர்வலங்கள் தடை

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில்  இன்று கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றை நடாத்துவதற்கு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு இன்று ஹோமாகம மஜிஸ்ட்ரேட்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது, இந்த வழக்கு தொடர்பில் சந்​தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்கள் மூவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதனாலேயே இந்த தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  (மு)