ஹோமாகம – வாகன விபத்தில் 17 இராணுவ வீரர்கள் காயம்..

ஹோமாகம பிரதேசத்தில் இன்று(05) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிட்டிபனவில் இருந்து ஹோமாகம நோக்கி பயணித்த ஆடை தொழிற்சாலையொன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்றுக்கு பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியதால் குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராணுவ வண்டியில் 19 இராணுவ வீரர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்தில் பேரூந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)