‘ஹோ கான பொகுன’ திரைப்படத்திற்கு எதிராக BBS முறைப்பாடு

‘ஹோ கான பொகுன’ திரைப்படத்தில் வரும் புத்தபகவானின் உரைகளில் வரும் உரை ஒன்றின் கருத்து வேறுபடுவதாக கூறி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே  ஞானசார தேரர் இன்றைய தினம்(04)  திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு முறைப்பாடொன்றினை முன்வைத்துள்ளார்.

இது குறித்த முறைப்பாட்டின் பிற்பாடு கருத்துத் தெரிவிக்கையில்;

கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சமயம் குறித்த திரைப்படங்கள் ஒளிபரப்புக்குள்ளாக முன்னர் தேரர்களுக்கு ஒளிபரப்பிக் காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆனால் மேற்குறித்த திரைப்படமானது ஒளிபரப்பிக் காட்டப்படவில்லை.

எமக்கும் அது குறித்து யோசிக்க நேரமும் கிடைக்கவில்லை. ஏனெனில் அது ஒரு சிறுவர் திரைப்படமென்பதாலேயாகும். இன்னும் குறித்த திரைப்படத்தில் சூட்சனமாக பிழையான போதனை பிறப்பிக்கப்படுகின்றது. இது கண்டிக்கத்தக்க மிகப்பெரிய தவறாகும்.

தற்போது திரைப்படம் வெளியாகி விட்டது. என்றாலும் DVD இருவட்டானது இன்னும் பிரசுரமாகவில்லை. ஆதலால் குறித்த இறுவட்டு வெளியிடும் போது சரிசெய்து வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையொன்றினையும்  திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் முன்வைத்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.