வாழ்நாள் முழுவதும் நியூசிலாந்து அணியிடம் மன்னிப்புக் கோருகிறேன்.. (VIDEO)

(FASTNEWS | COLOMBO) – நியூசிலாந்து அணியிடம் தனது வாழ்நாள் முழுவதும் மனிப்புக் கோரக் கடமைப்பட்டுள்ளதாக நேற்றைய(14) போட்டியின் பின்னர் உலகக் கிண்ணத்தினை வென்ற இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

நியூசிலாந்து வீரர் ஒருவரால் விக்கெட்டினை நோக்கி வீசப்பட்ட பந்தானது தனது துடுப்பில் பட்டு நான்கு ஓட்டங்களை பெற்றமையினால் தான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்புக் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் சிறப்பாகவே அமைந்தது என்றே கூற வேண்டும். மிகவும் சிறந்ததொரு அணி என்றே கூற வேண்டும்.

பென் ஸ்டோக் இனால் அடிக்கப்பட்ட பந்துக்கு ஓடும் போது, எதிர்தரப்பில் இருந்து பந்தானது மிகவும் வேகமாக விக்கெட்டினை நோக்கி வர பென் ஸ்டோக் இனது துடுப்பு மீளவும் பந்தில் பட்டு பவுண்டரியினை தாண்டியது. இது நியூசிலாந்து அணிக்கு மிகவும் தீர்மானமிக்க சந்தர்ப்பமாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.