இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக மற்றுமொரு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபிப்பது தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரலவால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற எண்ணிக்கை இரண்டாக உயர்வடைகின்றது. குறித்த விசேட நீதிமன்றமானது கொழும்பில் நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இல. 2087/92 இற்குக் கீழ் மேற்குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.