03 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் திறப்பு

(FASTNEWS|COLOMBO) – தென்மேற்கு சீனாவில் 03 மாநிலங்களை இணைக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டுவரும் மிக உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த மேம்பாலம் தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டு இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டிட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு ‘ஜிமிங்சான்ஷெங்’ என பெயரிடப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டபோது சுண்ணாம்புக் கற்கள் மற்றும் கரடு முரடான நிலப்பகுதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், 3 வருட உழைப்பு வீணாகாமல் சரியான முறையில் செயல்பட்டு இதர பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் சீனாவின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.