03 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(FASTNEWS|COLOMBO) – நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(15) மாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகியன தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி பகுதியில் களு கங்கையின் மில்லகந்த பகுதி நீர்மட்டம், தொடர்ந்தும் வௌ்ளப்பெருக்கு மட்டத்தை அண்மித்து காணப்படுதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.