(FASTGOSSIP | COLOMBO) – எதிர்வரும் மாதம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளின் தலைமை திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, 2019 ஆம் ஆண்டிற்காக உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் இவரே தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பில் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் இலங்கை ரசிகர்கள் இடையே அணியின் வெற்றி குறித்து கேள்வியும் எழுந்துள்ளதனை காணலாம் என்றே கூற வேண்டு.
விளையாட்டு இணையத்தளமான espncricinfo தகவலின்படி திமுத் கருணாரத்ன இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டி 2015ம் ஆண்டு மார்ச் 06ம் திகதி என பதிவாகியுள்ளது. அவ்வாறு இருக்க 04 வருட காலமாக விளையாடாது இருந்த திமுத் கருணாரத்னவுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
முன்வரிசை வீரராக களமிறங்கும் திமுத் கருணாரத்ன கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டிகள் 17இல் விளையாடியுள்ளார்.
அவரது கிரிக்கெட் வாழ்நாளில் எச்சந்தர்ப்பத்திலும் 06 ஓட்டங்களை விளாசியில்லாத பங்கேற்றிருந்த அனைத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 04 ஓட்டங்கள் 14 பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சதங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
