07 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக இருந்த பிரபல மொடல் நடாஷா…. (PHOTOS)

சுமார் 07 ஆண்டுகள் தம்மை பாலியல் அடிமையாக நடத்தியதாக கூறி பிரபல தொழிலதிபர் மீது பிரபல மொடல் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

துருக்கி மற்றும் ரஷ்யாவில் இடம்பெற்ற குறித்த தொடர்பில் தாம் இரண்டு பிள்ளைகளுக்கு தாயானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டவரான நடாஷா செரிப்ரி(25) தமக்கு நேர்ந்த கொடுமைகளை ஊடகங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார்.

கடந்த 07 ஆண்டுகளில் ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்கியது இல்லை என கூறும் அவர், தினசரி கொடூரமான சித்ரவதைக்கும் பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

தன்னைவிட 30 வயதுக்கு மூத்த அந்த நபரை சந்தித்த ஒரு மாதத்திலேயே அவர் மீது ஈர்ப்பு வந்ததாகவும், ஆனால் அது தமது வாழ்க்கையையே பாழாக்கியதாகவும் நடாஷா தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக தம்மை கடத்திச் சென்ற அந்த நபர், தொடர்ந்து 07 ஆண்டுகள் அடிமையாகவே நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

06 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் துருக்கி நாட்டுக்கு அழைத்துச் சென்ற அவர், ஒரு கைதி போலவே மிக கொடூரமாக நடத்தினார் என்றார். இதனிடையே குறித்த நபரின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகன், நடந்த கொடுமை அனைத்தையும் துருக்கி பொலிசாருக்கு தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து நடவடிக்கை எடுத்த துருக்கி பொலிசார் நடாஷாவை உக்ரைனுக்கு நாடு கடத்தியது. இருப்பினும் உக்ரைன் சென்று நடாஷாவை மீண்டும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று மாஸ்கோவில் உள்ள புறநகர் பகுதியில் 2 ஆண்டு காலம் சிறை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் அவரிடம் இருந்து உயிர் தப்பும் போது, மிகவும் வலுவிழந்து உதிரப்போக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் குறித்த நபரை ரஷ்ய பொலிசார் தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for ukraine model natasha raped

####