08 வருடங்களுக்கு பிறகு இலங்கை – இந்தியா முக்கோணத் தொடர்… (போட்டி அட்டவணை)

மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தொடர் முடிந்தவுடன் இலங்கை வரவிருக்கின்றது.

இலங்கை அணியுடன் 3-டெஸ்ட் போட்டிகள், 5-ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டி என முக்கோணத் தொடரில் விளையாட உள்ளது.

இதில் டெஸ்ட் தொடர் ஜுலை 26-ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் திகதி முடிவடைகிறது. ஒருநாள் தொடர் 20-ஆம் திகதியும், T20 தொடர் செப்டம்பர் 6-ஆம் திகதியும் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மூன்று தொடர்களில் மோதுவது எட்டு வருடங்களுக்கு பிறகு என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இரு அணிகளும் கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய மண்ணில் விளையாடின. அப்போது மூன்று டெஸ்ட் போட்டிகளும், ஐந்து ஒருநாள் போட்டிகளும், இரண்டு T20 போட்டிகளும் நடைபெற்றன.

இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும், T20 தொடர் 1-1 என்ற சமநிலையிலும் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை-இந்தியா தொடருக்கான அட்டவணை

1ம் டெஸ்ட் போட்டி – ஜூலை 26-30, GICS, காலி
2ம் டெஸ்ட் போட்டி – ஆகஸ்ட் 3-7, SSC, கொழும்பு
3வது டெஸ்ட் போட்டி – ஆகஸ்ட் 12-16, PICS, கண்டி

1ம் ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 20, RDICS, தம்புள்ளை
2ம் ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 24, PICS, கண்டி
3வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 27, PICS, கண்டி
4வது ஒருநாள் போட்டி – ஆகஸ்ட் 31, RPICS, கொழும்பு
5வது ஒருநாள் போட்டி – செப்டம்பர் 3, RPICS, கொழும்பு

T20 போட்டி – செப்டம்பர் 6, RPICS, கொழும்பு

 

(rizmira)