09 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு…

நாளை(30) காலை 9.00 மணி முதல் மாலை 6.00  மணி வரை 09 மணித்தியாலங்களுக்கு அநுராதபுரம் மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நுவரவெவ நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் அத்தியவசிய திருத்தப் பணிகளின் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.