அம்பலாங்கொட பகுதியில் மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெறுவதற்கு முயற்சித்த 32 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுத்து 1 இலட்சம் கப்பம் கோரிய நிலையில், 50,000 ரூபாவை முற்பணமாக பெற்றுக் கொள்ளும் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை இன்று(03) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.