1 லீற்றர் டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரிப்பினால் மாதாந்தம் 2பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் – சந்திம

ஒரு லீற்றர் டீசலுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் மாதாந்தம் 2பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய நிதி அமைச்சினால் கடந்தஆகஸ்ட் 20ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசலுக்கான சில்லறை விலை அதிகரிக்கப்படாமல் டீசலுக்கான வரி மூன்று ரூபாவால் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி 10 ரூபாவாக இருந்த குறித்த வரி 13 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

எனினும் டீசலினால் ஓரளவு லாபம் கிடைத்துள்ள போதும் பெற்றோலால் நஷ்டமே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.