இன்று(18) அதிகாலை ஏற்பட்ட வேன் விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

(FASTNEWS|COLOMBO) நுவரெலியா – வட்டவளை  பிரதேசத்தில் வேன் ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காயமடைந்தவர்கள் வட்டவளை  பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவர் நாவலப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.