நாட்டில் 10 நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று(06) முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், சில தரப்பினர் குற்றஞ் சுமத்துகின்றனர்.
ஒரு வாரத்திற்குள் பொலிசார் மற்றும் இராணுவத்தினரை மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவசர காலநிலையின் கீழ் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று(06) வெளியிடப்படும். பத்து நாட்களுக்கு அவசர நிலையினை பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரம் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும் …” எனவும் அமைச்சர் திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
#rishma