10 வது இன்டியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் (IPL) இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத்தில் இடம்பெற்ற குறித்த இந்த போட்டியில் ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணியை எதிர் கொண்ட மும்பை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த ரைசிங் புனே சுப்பர் ஜயன்ட் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கருநல் பாண்டியா (Krunal Pandya) தெரிவு செய்யப்பட்டார்.