100% காதலில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்…

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று(11) பூஜையுடன் ஆரம்பமானது.

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அப்படத்தின் தமிழ் ரீமேக்காக ‘100% காதல்’ உருவாக இருக்கிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(11) பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே, படத்தின் இயக்குனர் எம்.எம்.சந்திரமெளலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 100% காதல் படத்தை தயாரிக்கின்றனர். எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷே படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.