10,000 ஓட்டங்களைக் கடந்த யூனிஸ்கான், ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக களமிறங்குகிறார்…

பாகிஸ்தான் அணியின் மூத்த துடுப்பாட்ட வீரரான யூனிஸ்கான், தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி போட்டிக்குப்பின் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகிறார்.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் யூனிஸ்கான். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்களை கடந்த ஓரே வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் யூனிஸ்கான், ஓய்விற்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அவர் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் அடிஃப் மாஷல் கூறுகையில் ‘‘எங்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யூனிஸ்கான் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருடன் ஒப்பந்தத்திற்கான இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தானைச் சேர்ந்த இன்சமாம் உல் ஹக், ரஷித் லடிஃப், கபீர் கான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

பாகிஸ்தானின் 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)