10000 ரூபா சம்பள உயர்வினை பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

நாட்டின் நிலைமை மோசமாகவே காணப்படுகின்றது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் அதிருப்தியில் இருக்கின்றார்கள். ராஜபக்ச அரசாங்கத்தின் சில கடன்கள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற போதிலும், சர்வதேச நாணய நிதியம் கூட மஹிந்தவின் பொருளாதார கொள்கைகள் குறித்து அதிகம் அதிருப்தி வெளியிட்டதில்லை. நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளித்த அரசாங்கம் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.