![முஸ்லிம் சட்டங்களை யார் மாற்றினாலும் நாம் மாற்ற மாட்டோம் [VIDEO] முஸ்லிம் சட்டங்களை யார் மாற்றினாலும் நாம் மாற்ற மாட்டோம் [VIDEO]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2021/03/AZATH-SALLY.jpg)
முஸ்லிம் சட்டங்களை யார் மாற்றினாலும் நாம் மாற்ற மாட்டோம் [VIDEO]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் வெளியிட்ட கருத்தின்மூலம், ஏதாவது தவறுகள் நேர்ந்திருக்குமாயின், அதற்கு தாம் மன்னிப்பு கோருவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சட்டம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், விளக்கமளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டத்தை எவர் மாற்றியமைத்தாலும் தாங்கள் மாற்றப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் உள்ளவற்றுக்கே நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
அதனைவிடுத்து, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களை பொருட்படுத்த அவசியமில்லை என அசாத் சாலி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ : UTV TamilHD