
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் சூழலில் ஏனைய தனிப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை தளர்த்துவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
டொலர் தொடர்பான பிரச்சினையே தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் இறக்குமதியினை கட்டுப்படுத்தி ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கு இயலுமானவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.