
சர்வதேசத்தில் சீரழியும் இலங்கைக் கொடி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமொன்றான அமேசனானது, இலங்கை தேசியக்கொடி பொறிக்கப்பட்ட பாதணி மற்றும் காற்துடைப்பான்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ள விடயமானது பெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நிறுவனமானது தமது இணையத்தில் 20 அமெரிக்க டொலருக்கு குறித்த பாதணிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், காற்துடைப்பானை 20.20 டொலர்களுக்கு விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளது.
ஒவ்வாரு நாடும் தமது தேசியக்கொடியை மரியாதைக்குரிய சின்னமாக கொண்டுள்ளன.
இந்நிலையில் நாடுகளின் கொடிகளை இவ்வாறு அவதூறு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளதானது அனைவரது மத்தியிலும் பெரிதும் எதிர்ப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
அமெரிக்கா, பாகிஸ்தான், நியுஸிலாந்து, ஜேர்மன் என பல நாடுகளின் கொடிகள் இவ்வாறு பாதனிகள் மற்றும் காற்துடைப்பானுக்கான வடிவங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.