எனது பாதுகாப்பு படைகள் விலக்கப்பட்டு நான் தனி மனிதனாக இருந்தாலும் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது வரை காலமும் எனது பாதுகாப்புக்காக சேவையாற்றிய அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதோடு உங்கள் சேவையை நான் கௌரவப்படுத்துகின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திரும்பப் பெறப்பட்டு பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
