102 வயதில் ‘டாக்டரேட்’ பட்டம் பெற்ற மூதாட்டி

102 வயதில் ஜெர்மனை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மருத்துவத் துறையில் ‘டாக்டரேட்’ பட்டம் பெறவுள்ளார்.

நாஜிக்களின் இனவெறியால் இழந்த தனது கனவை, 77 வருடத்திற்கு பின் வைராக்கியத்துடன்
மீட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த இன்ஜெபோர்க் ரபோபோர்ட் 1938 ஆம் ஆண்டு தொண்டை அழற்சி நோயில் டாக்டரேட் பட்டம் பெறும் கனவுடன் தீவிரமாக படித்து வந்தார்.

ஆனால், அவர் அம்மா ஒரு யூதர் என்பதால் அவரது தேர்வு படிவங்களை நாஜி அரசு நிராகரித்தது. இந்நிலையில், கடந்த வருடம் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மருத்துவத்துறை பேராசிரியராக உள்ள அவரது மகன் டாம், அவர் படித்த ஹாம்பர்க் பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டு தன் தாய்க்கு வழங்க வேண்டிய டாக்டரேட் பட்டம் குறித்து பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அவர்கள் ஒரு வாய் வழித் தேர்வு நடத்தி, ரபோபோர்ட் அதில் தேர்ச்சி பெற்றால் அவருக்கு டாக்டரேட் பட்டம் வழங்குவதாக கூறினர்.

வாய் வழித் தேர்வில் அவர் தேறியதையடுத்து வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெறுகிறார்.

இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் டாக்டர் பட்டம் பெறும் ஒரே நபர் என்ற சாதனையை அவர் படைக்கிறார்.