103 வயதில் காதல் கொண்டு திருமணம்

இங்கிலாந்தை சேர்ந்தவர், ஜார்ஜ் கிர்பி, 103. இவர், டோரீன் லக்கி, 91 என்ற மூதாட்டியை, திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும், ‘ஒகே… கண்மணி’ பாணியில், திருமணம் செய்யாமலே, 27 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், கிர்பி, நேற்று முன்தினம், தன், 103வது பிறந்த நாள் விழாவுடன், திருமணத்தையும் சேர்த்து நடத்தினார். கிழக்கு சூசக்ஸ் மாகாணம், ஈஸ்ட்போர்ன் பகுதி யில் உள்ள ஒரு ஓட்டலில், கிர்பி, லக்கியை ஊரறிய, மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் ‘கின்னஸ்’ அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

அண்மையில் கீழே விழுந்ததால், நடக்க முடியாத கிர்பியை, மனைவி லக்கி, சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். ”பெயருக்கேற்ப, ‘லக்கி’யான மனைவி வாய்த்திருப்பதால், நான் மகிழ்ச்சியாகவும், இளமைத் துடிப்போடும் இருக்கிறேன்; நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம்,” என்று பெருமையுடன் கூறினார் கிர்பி.

அவருக்கு சற்றும் சளைக்காத லக்கி, ”பொன்னாள்… இது போலே… வருமா இனி மேலே… உன்னால் கண்ட சுகம் எத்தனையோ…” என, பூரிப்புடன் பாடினார்.திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு, ஏழு மகன்கள், 15 பேரப் பிள்ளைகள், ஏழு கொள்ளுப் பேரன்கள் உள்ளனர்.

ஜார்ஜ் கிர்பி, தனது, 76வது வயதில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனிமையில் இருந்த சூழலில், விதவையான லக்கியை கண்டார். காதல் கொண்டார்…..

இப்படியிருக்கு உலகம்..

One thought on “103 வயதில் காதல் கொண்டு திருமணம்

  1. இவனுடைய இளமை பருவம் எப்படி இருந்துருக்கும்

Comments are closed.