செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரோமானிய வீராங்கனையான மிக்கேலா புஸாரென்ஸ்கியுவின் கடுமையான சவாலை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்றிரவு நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் மிக்கேலாவை எதிர்கொண்ட செரீனா வில்லியம்ஸ் முதல் செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் வென்றிருந்தார். எனினும், இரண்டாவது சுற்றில் கடுமையாக போராட்டிய போதிலும் 5க்கு 7 என்ற கணக்கில் தோற்றார்.

இதனால் தீர்மானமிக்க 3 ஆவது செட்டை வென்று மூன்றாவது சுற்றுக்கு செல்வதில் இருவரும் திட்டமிட்டனர். எனினும், மூன்றாவது செட்டில் சுதாரித்துக்கொண்ட செரீனா, தனது அனுபவத்தை பயன்படுத்தி 6க்கு 1 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி மூன்று செட்களில் இரண்டு செட்டில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேவேளை, மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில் டென்மார்க் வீராங்கனையான கிளேரா டோசனை எதிர்கொண்ட பெலாரசின் விக்டோரியா அசரென்கா 7க்கு 5, 6க்கு 4 என்ற கணக்கில் முதலிரண்டு செட்களிலும் வெற்றியீட்டி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.