தனி வழியில் ‘மங்கள’
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளியிட்டிருந்த அழைப்பை முன்னாள் நிதிமையச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதற்கு மங்கள சமரவீர ஆர்வம் கொண்டிருப்பாரேயானால், அது குறித்து கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.