ரிஷாதின் மைத்துனர் மீதான பழியும், கன்னி கழியாத யுவதியும் [VIDEO]

ரிஷாதின் மைத்துனர் மீதான பழியும், கன்னி கழியாத யுவதியும் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனரான மொஹமட் ஷியாப்தீன் இஸ்மத்தீன் இனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்த யுவதி, தற்போதும் கன்னிப் பெண்ணாக இருப்பதாக நீதிமன்று முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்;

“பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் சிறைவாசம் குறித்து விளக்குவதாக சபாநாயகர் கடந்த அமர்வில் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் தங்கியிருக்கும் அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகின்றது. அதற்கு பின்னர் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில், இஸ்லாம் மத அடிப்படையில் அவர் இரவில் இரண்டு முறை வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். அதற்கு அவருக்கு தண்ணீர் தேவை. இது நியாயமற்றது.

இதுவே ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தால், அவருக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கூட கொண்டு வந்து கொடுக்கபப்டுகின்றது. அனைத்துமே அரசியல் சூழ்ச்சிகள்.

அவ்வாறு தான் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் ஒருவருக்கு எதிராக பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் பல வாரங்கள் சிறையில் இருந்தார். பின்னர் அப்பெண்ணின் மருத்துவ அறிக்கை வந்தபோது, ​​அந்த பெண் கன்னியாக இருந்தார்..” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனரான மொஹமட் ஷியாப்தீன் இஸ்மத்தீன் இனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்த யுவதி, தற்போதும் கன்னிப் பெண்ணாக இருப்பதாக நீதிமன்று முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த இஷாலினி எனும் யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஸ்மத்தீன், 2016ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ராமசந்திரன் ஷஷி குமாரி எனும் யுவதியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிசாரினால் நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த யுவதி தொடர்பிலான வைத்திய அறிக்கையில், குறித்த யுவதியின் கன்னி ஊடுருவலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கை கடந்த 16ம் திகதி (16-07-2021) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

அதன்படி, குறித்த சந்தேக நபர் 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சீ.ராகல ஆகஸ்ட் 16ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக செய்திகளை வெளிப்படுத்திய ஊடகங்கள், நீதிமன்றினால் அவரை பிணையில் விடுவித்தமைக்கான காரணத்தினை வெளிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

நீதிமன்ற அறிக்கை;

police info

 

  • ஆர்.ரிஷ்மா