பிக்பாஸ் அரங்கத்தில் களமிறங்கிய உலகநாயகன்
(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளமை பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டதனால் கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன், கொரோனா சிகிச்சை முடிந்து நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட புரமோ தற்போது வெளியாகியுள்ளது.