11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் – 02 கடற்படை ஊழியர்கள் கைது..

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு கடற்படை ஊழியர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், நேவி சம்பத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.