(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கு தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கையை கட்டட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.