கடாபியின் நிலைமையே கோட்டாபாயவிற்கு! வெளியான எச்சரிக்கை

கடாபியின் நிலைமையே கோட்டாபாயவிற்கு! வெளியான எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

வீதியில் வைத்து பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட லிபியாவின் ஜனாதிபதி கடாபியின் நிலைமை தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு வருவதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்,

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்குக் காரணம்.

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவில் உள்ள யாசகர்கள் கூட உதவும் நிலை ஏற்பட்டுவிட்டது.

ஒரு யாசகர் சுமார் 10 ஆயிரம் ரூபா வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார வீழ்ச்சி அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தமின்மை அகியவற்றால் நாட்டில் அண்மையில் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன.

இவ்வாறான வன்முறைகளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.