தேசபந்து தென்னகோனை தாக்கிய மற்றுமொரு சந்தேகநபர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய கணனி தொழில்நுட்ப நிபுணர் ஒருரே இவ்வாறு கொம்பனித்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மே 10 ஆம் திகதி பெரஹெர மாவத்தையில் வைத்து தாக்கப்பட்டார்.
முன்னதாக, தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.