ஐ.தே.கட்சியில் இணையும் அளவுக்கு தலையில் வருத்தங்கள் எதுவுமில்லை: சாகர பதிலடி

ஐ.தே.கட்சியில் இணையும் அளவுக்கு தலையில் வருத்தங்கள் எதுவுமில்லை: சாகர பதிலடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலையில் சுகவீனங்கள் எதுவுமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்பட்ட சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றி தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் கட்சி.அப்படியான கட்சியை கைவிட்டு, வேறு கட்சியில் இணைந்து கொள்ளும் அளவுக்கும் தலையில் சுகவீனங்கள் எதுவும் எவருக்குமில்லை என குறிப்பிட்டுள்ளார்.