நடிகை மீனாவின் கணவர் காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மீனா – வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தனர்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் வைத்தியசாலையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.
இருப்பினும் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் காலமனார். இவரின் இறப்புக்கு திரையுலத்தினர் இரங்கலை தெர்வித்து வருகின்றனர்.