ஜனாதிபதி கோட்டாவை பதவி விலக்க சகலரும் ஒன்றுபட வேண்டும் – ரிஷாட் பதியுதீன் எம்பி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற சகலருமே நாடு சீரழிந்து விட்டதாக ஒப்புக்கொள்கின்றீர்கள்
ஜனாதிபதி கோட்டாவினால்தான் இந்தப் பிரச்சினை வந்தது என்பதும் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற சகலரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப முன் வர வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சற்று நேரத்துக்கு முன் பாராளுமன்றத்தில் உரையாற்றியவர், கோட்டா என்ற ஒரு தனிநபருக்காக முழு நாடும் துன்பப்பட முடியாது. அவரோடு சேர்ந்தவர்களும் அவருக்கு ஆலோசனை வழங்குபவர்களும் அவர் ஒரு ஃபெயில் லீடர் என்பதை சொல்லுங்கள். bஇலங்கையின் நிலையை பார்த்து உலகமே இன்று வேதனையடைந்திருக்கிறது. எனவே யதார்த்தத்தை உணர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.
ஆகவே, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே இந்த நாட்டின் துன்பத்துக்கும் துயரத்துக்கும் விமோசனம் கிடைக்கும். நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியே ஆக வேண்டும். ஆகவே இந்தப் பாராளுமன்றத்தில் உள்ள சகலரும் ஒன்றுபட்டு அவரை பதவி விலக்குவதற்கு ஒன்றுபட்ட முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.