கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை ஒன்றை இன்று (21) பிறப்பித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பில் பொலிஸாரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் நீதிமன்றில் இன்று ஆஜராகவில்லை.
இதனால் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.