ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளோம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வமாக பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ” தமிழ் மக்களின் அவிநாசிகளை பெற்றுக் கொள்வதற்காக அவர்களின் ஆணை பெற்ற தரப்பு என்ற அடிப்படையில், புதிய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எப்போதும் தயாராகவே உள்ளோம்”. என அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க வை பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் நீங்கள் ஏன் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ” மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சகளின் பிரதிநிதியாக ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டதனாலேயே அவரை நாங்கள் எதிர்த்தோம். ” என்றார் அவர்.
மிக நீண்ட காலமாக உரிமைக்காக போராடிவரும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக் கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் சம்பந்தன் கூறினார்.