தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு!

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகையில், முழுமையாக அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட மரபுரிமைசார் சொத்துக்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்வதற்காக, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்று அங்கு செல்லவுள்ளது.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள மரபுரிமைசார் சொத்துக்கள் குறித்த தெளிவான தகவல்கள் தொல்லியல் திணைக்களத்திடம் இல்லை என்பதனால், அங்குள்ள பொருட்களின் பட்டியலை ஆராயந்து தகவல்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நான்கு பிரதான கட்டடங்கள், போராட்டக் குழுவினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதையடுத்து, அந்தக் கட்டடங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களை, மீள்நிர்மாணிப்பதற்கான இயலுமை குறித்து ஆராய்வதாக தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.