சீனாவுடனான பேச்சுக்கள் கடினமாகவே இருக்கும்! கூறுகிறது ஃபிட்ச் குறிகாட்டி

சீனாவுடனான பேச்சுக்கள் கடினமாகவே இருக்கும்! கூறுகிறது ஃபிட்ச் குறிகாட்டி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தை சிறப்பான முறையில் அமைப்பதுவே, இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான முக்கியமான முன்நிபந்தனை என்று சர்வதேச பொருளாதார குறிகாட்டியான ஃபிட்ச் தரப்படுத்தல் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயச் சபையின் நிதியுதவி மற்றும் உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு போன்றவற்றின் மூலம் இலங்கை தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற ஃபிட்ச் தரப்படுத்தலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி அதிக பெரும்பான்மையுடன் உறுதிப்படுத்தப்பட். அவரது அரசாங்கம் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஈர்த்துள்ளது.

இந்த வளர்ச்சியானது, பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று ஃபிட்ச் தரப்படுத்தல் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆதரவை அதிகரிக்கலாம் என்று ஃபிட்ச் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை அரசாங்கத்தின் நாடாளுமன்ற நிலைப்பாடு வலுவாகத் தோன்றினாலும் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு பலவீனமாகவே உள்ளது.

பொருளாதார நிலைமைகள் மேம்படவில்லை அல்லது சீர்திருத்தங்கள் பொதுமக்களின் எதிர்ப்பை உருவாக்கினால் அது அரசியல் ஸ்திரமின்மை அபாயத்தை அதிகரிக்கலாம்.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இல்லாத நிலையில், இலங்கை மிக நெருக்கடியான வெளி நிலையை எதிர் காலத்தில் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சீனாவிற்கு செலுத்த வேண்டிய கடன் காரணமாக, அதனுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிக்கலாக இருக்கலாம் என்றும் ஃபிட்ச் தரப்படுத்தல் தெரிவித்துள்ளது.