பதுளை எரிபொருள் நிரப்பு நிலைய துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை – ஹிந்தகொட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் பதுளையில் உள்ள வானக திருத்துமிடமொன்றின் உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தியதாக கருதப்படும் துப்பாக்கி வாகன திருத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) இரவு 11.30 அளவில் குறித்த சந்தேகநபர் ஹிந்தகொட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்துவதற்காக குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.