பெத்தும் கேர்ணர் இன்று நீதிமன்றுக்கு

பெத்தும் கேர்ணர் இன்று நீதிமன்றுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 13ஆம் திகதி பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை வழிநடத்திய குற்றச்சாட்டில் கைதான, சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு குற்றவியல் பிரிவில் சரணடைந்ததை அடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அண்டனி வேரங்க டி சில்வா, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.