எரிபொருள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற பொது முகாமையாளர் கைது

எரிபொருள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற பொது முகாமையாளர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலை பொது முகாமையாளர் எரிபொருள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றதாக கூறி இலஞ்ச ஒழிப்பு பிரினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலையில் தனியார் பஸ்களுக்கும் அதிகளவில் டீசல் விநியோகம் செய்வதற்கு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு பிரிவினரால் இவர் இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலையில் டீசல் விநியோகம் செய்யப்பட்டுவரும் நிலையில் சில பஸ்களுக்கு அதிகளவில் டீசல் வழங்குவதற்கு பணம் இலஞ்சமாக பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் இவர் இலஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.